எண்ணங்களே வாழ்க்கை!
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC3S_4DQNN7VOflIztVfWRMsmbbqXm9h7v03rZ0NmB1wKUgDzqSGlAdwdUOKLRfiPLWBV0ahIs7kU4dJHVOENcbkm4j_lhnepmE7JUIQnyVJFJ4OvwEPQpWYDTUrXxbEUrZLrgtCD2QUM9/s1600/1656384518683068-0.png)
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம் நடைபயிற்சி போனாங்க. ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க. அப்போ அங்கே ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை பார்த்த ராஜா... "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்ன்னு சொன்னார். மந்திரி பறிக்க போனார். அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான். ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும். ராஜா சொன்னார். யோவ் மந்திரி.!! அத பறிச்சு சாப்பிடு. வாந்தி வருதான்னு பாக்கலாம். வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி. ராஜா கேட்டார். யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு. அந்த குருடன் சொன்னான். அது பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிற்கும் ன்னு. ராஜாவும் அப்படியே பண்ண... மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது. ராஜா குருடனை பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே.? எப்படி சரியா தீர்வு சொன்னாய்.? குருடன் சொன்னா...