சிந்தனைத் துளி


  • வாழ்வில் உதவி செய்ய... ஊக்கப்படுத்த யாருமில்லை என்று தயவுசெய்து கவலை கொள்ளாதீர்கள்…


  • உங்களையும் உங்களுக்குள் இருக்கும் இறைவனையும் விட வேறு யாரும் உங்களுக்கு சிறப்பாக உதவி செய்ய முடியாது…


  • வாழ்வில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் உங்கள் ஆழ்மனதிடம் ஒரு முறை கேளுங்கள்…


  • யார் எடுக்கும் முடிவு தவறாக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் உங்கள் ஆழ்மனம் எடுக்கும் முடிவு நிச்சயமாக சரியாகத்தான் இருக்கும்…


  • உங்களுக்குள் இருக்கும் இறைவனை நம்புங்கள்... 


  • அவரை தவிர வேறு யாராலும் உங்களுக்கு சிறப்பாக வழிகாட்ட முடியாது…


  • உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும்பொழுது அனைவரிடமும் பேசுங்கள்.


  • ஆனால் முடிவுகளை நீங்களே எடுக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்…


  • உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில் தான்..


  • தீதும் நன்றும் பிறர் தர வாரா…


  • உங்கள் மனசாட்சியிடம் பேசுங்கள்… உங்களை நம்புங்கள்… உங்களுக்குள் இருக்கும் இறைவனை நம்புங்கள்...  என்றும்  நல்லது மட்டுமே நடக்கும்..🙏

Comments