ஏழை தந்தை!
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSryq0Lrhcz6WUyzund5EFMNGcw_Qh0fDZfbeBo_3EdjMfc37D_FNyiem5toXB8HKDgii2p71QI6XKp7qV_B1gbal_aaxLzq4p8jxhxS70wfzFWSLbxJTdXk2krrnWvOTuCFU3SR02ezF9/s1600/1659283464431827-0.png)
இந்த வீடியோ பதிவை பார்ப்பதற்கு முன், இதை படியுங்கள். https://youtu.be/T5fGfSszQfc ஈரானிய சினிமா தயாரிப்பாளர் ஒருவர் எடுத்த, ஒரு நிமிடம் மட்டுமே ஒடக்கூடிய இந்தக் குறும்படம், உலகெங்கும் இருக்கக்கூடிய ஏழை மக்கள் சந்திக்கும் கடும் பசியை புரிந்துக் கொள்ள உதவுகிறது. தன் மகளுடன் மளிகைக் கடைக்குச் செல்லும் ஒரு ஏழைத்தந்தை, அங்கே ரொட்டியை திருடி விடுகிறார். திருடி விட்டு திரும்ப எத்தணிக்கும் வேளையில், அந்த கடைக்காரர் அவரை கூப்பிட்டு நிற்கச் சொல்கிறார். இதை ஏக்கத்துடன் பார்த்த மகள், ஒன்றும் புரியாத நிலையில், தன் தந்தையைப் பார்த்து, "என்ன நடக்கிறது?" என்று கேட்கிறாள். இதைப் புரிந்துக் கொண்ட தந்தை, கவலைப்பட்டு, மனம் கலங்கி, மன்னிப்புக் கேட்க எத்தணிக்கிறார். அதற்கிடையே, அந்த கடைக்காரர் தன் மகளிடம் பேசுவதை கேட்கிறார். "எனதருமை குழந்தையே, உன் தந்தை பணம் கொடுத்து விட்டு, மிச்சம் வாங்க மறந்து விட்டார்". அப்படி சொல்லி விட்டு, எதுவுமே நடக்காதது போல, கொஞ்சம் பணத்தை எண்ணி அந்த ஏழைத்தந்தையின் கைகளில் தருகிறார். குற்ற உணர்வில் மூழ்கி, ஒன்றும் செய்ய இயலாதவராக, தன் தலையைக் குனி...